Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது 

புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதி பேருந்து சேவை ஒன்று ஆரம்பம்!

புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதி பேருந்து சேவை ஒன்று  இன்று (திங்கட்கிழமை) இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினருடாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் புதி பேருந்து சேவை இறுப்பிட்டி அரியனார் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்களின் அவசிய தேவை கருதியதான கோரிக்கையை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலலகிருஸ்னனுக்கு வழங்கியிருந்த அறிவுறுத்தலுக்கிணங்க இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வத்துடன் குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிப்பட்டிருந்தது.

இதற்கிணங்க குறித் பகுதிக்கான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வம்  தெரிவித்திருந்தமைக்கு இணங்க இன்றையதினம் குறித்த பேருந்து சேவையை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்

.

Related posts

Leave a Comment