மலையகம் 

லோகி தோட்டத்தில் மரத்தின் கிளை மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் ஒருவர் பலி!

தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Related posts

Leave a Comment