Latest | சமீபத்தியது உள்நாடு 

கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலய பூசை வழிபாடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலய அறங்காவலர் சபை மற்றும் கன்னியா சிவன் ஆலய பூசை என்பனவற்றிற்கு எதிராக உப்புவெளிப் பொலிஸார்  தடை விதித்து கடந்த 02.12.2020 தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை கன்னியா நிர்வாக சபையினரான க.துஷ்யந்தன், க. தேவகடாட்சம், கு.செந்தூரன் ஆகியோர் வழக்கறிஞர் சி.ஐஸ்வர்யா, நிரோசன் ஆகியோரின் மூலம் முன்னெடுத்த நகர்வுப் பிரேரணையினைப் பரிசீலித்த நீதிபதி குறித்த வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு மற்றும் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக கலாசாரத் திணைக்களத்தினால் பிரதேச செயலகத்தில் செய்த முறைப்பாடு, மாவட்டச் செயலகத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு,பிரதமர் செயலகத்திற்கு விடுத்த கோரிக்கை, ஜனாதிபதிக்கு அனுப்பிய மனு எனக் கடிதங்களும், சந்திப்புகளும் இடம்பெற்றிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற 8 வழக்கு அமர்வுகள், 6 தடவை பொலிஸ் முறைப்பாடுகள் என்பனவற்றின் பின் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிகளில் உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் சி.சுபாசினி , வழக்கறிஞர் தி.துஷ்யந்தன் , வழக்கறிஞர் .சி.ஐஸ்வர்யா,  நிரோசன் மற்றும் வழக்கறிஞர் ந.வரதன் ஆகியோருக்கும் கன்னியா சிவன் ஆலய பரிபாலன சபையினர் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment