Latest | சமீபத்தியது உள்நாடு 

முல்லைத்தீவில் தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் கற்களை கடத்தி சென்ற 10 பேர் கைது

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை அனுமதியற்ற முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்ணிமுறிப்பு பகுதியில் எதுவித அனுமதியும் அற்ற நிலையில் பாரிய இரண்டு கற்களை கனரக வாகனங்களில் கொண்டு சென்ற வேளை இராணுவத்தினரின் வீதி சோதனை நடவடிக்கையின் போது மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் இருந்து ஒரு கைபிடி மண்ணும் மீட்கப்பட்டுள்ளதுடன் இது புதையல் தோண்டும் நடவடிக்கையாக இருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கைதானவர்களையும் சான்றுபொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தும் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.        

Related posts

Leave a Comment