Latest | சமீபத்தியது உள்நாடு 

விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணம்

திருகோணமலை தோப்பூர் பிரதேசத்திலிருந்து கொழும்புக்கு தனது குடும்பம் சகிதம் பயணித்த கார் ஒன்று குருணாகல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தநிலையில் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஸாக்(நளிமி) 49 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஜோன் கொத்தலாவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார்.இவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment