Latest | சமீபத்தியது Politics | அரசியல் World | உலகம் 

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தயார் -இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை முகங்கொடுத்திருக்கக்கூடிய நிதிநெருக்கடியைக் குறைக்கும் வகையில் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டின் வசமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தற்போது டொலருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதன்விளைவாக உணவு, எரிபொருள் உள்ளடங்கலாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கான கொடுப்பனவுகளை உரிய காலப்பகுதியில் செலுத்தமுடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாடு முகங்கொடுத்திருக்கும் நிதிநெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவகையில் முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்தியாவிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்த ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்றைய (24) தினம் இந்தியாவிற்குச் செல்லவுள்ள நிலையில், எஸ்.ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment