Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

உடன் அமுலாகும் வகையில் காவல்துறை ஊரடங்கு….

களனி, கொழும்பின் பல காவல்துறை பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் காவல்துறை ஊரடங்கு உடன் அமுலாகும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் அறிவித்துள்ளார். கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொடை மற்றும் கல்கிசை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், களனி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

தற்போதைய பொருளாதார பிரச்சினைகள் குறித்த கௌரவ பிரதமர் தலைமையிலான கலந்துரையாடல்…

தற்போதைய பொருளதார பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் நீண்ட கால பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பொருளாதார மறுமலர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் கண்டு பொருளாதாரத் துறையில் நிபுணர்களின் பங்களிப்புடன் ஒரு அறிவார்ந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். இதன்போது கருத்து தெரிவித்த நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க அவர்கள், மார்ச் 2020க்குப் பின்னர் 2020 மற்றும் 2021ல் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக அரசாங்க மருத்துவச் சேவைக்கான செலவு அதிகரித்தது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சிறு வணிகங்களைப் பாதுகாக்கும் செலவையும்,…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

பல்வேறு துறைகளுக்கு மேலும் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு…

வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இன்று, (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மின் உற்பத்தியில் இணைப்பதற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோர்ட் நெஸ்பி அவர்கள் தெரிவித்தார். லோர்ட் அவர்களினால் எழுதப்பட்ட “Paradise Lost : Paradise Regained” என்ற நூலை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கி வைத்த அவர், தனது இளமைக் காலம் முதல் இலங்கையுடன் இருந்த…

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

ஐ.நா. அமைதிப்படையின் ஹெலிக்கொப்டர் விழுந்து விபத்து – 8 பேர் பலி

கொங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படையின் ஹெலிக்கொப்டர் விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டுள்ளது. ஐ.நா.வின் இந்த அமைதிப்படையில் பாகிஸ்தான் இராணுவமும் இடம்பெற்றுள்ளது, இதற்காக பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் கொங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு கிவு மாகாணத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை பாகிஸ்தான் இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது. ஹெலிக்கொப்டரில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உட்பட ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் இருந்தனர், புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில்…

Read More
Entertainment | பொழுதுபோக்கு, Latest | சமீபத்தியது சினிமா 

வில் ஸ்மித்திடம் விளக்கம் கோரியுள்ள ஆஸ்கர் நிர்வாகம்….

ஆஸ்கர் விழாவில் சக நடிகரை அறைந்ததால் சர்ச்சையில் சிக்கிய வில் ஸ்மித் குறித்து அகாடமி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும் நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். பின்னர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற வில் ஸ்மித் தனது செயலுக்கு கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஆஸ்கர் அகாடமி நிர்வாகத்திற்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கியது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக…

Read More
Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது உள்நாடு 

20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்…

யாழ்ப்பாணம் – கோவளம் கடற்பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. சந்தேகநபர்களிடமிருந்து 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 20 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட முல்லைத்தீவு மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

அஞ்சல் சேவையில் தாமதம்….

அஞ்சல் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

தீர்வை வரி செலுத்தாது கொண்டு வரப்பட்ட 1 கிலோ 430 கிராம் தங்கம் கைப்பற்றல்….

தீர்வை வரி செலுத்தாது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1.43 கிலோ கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பிரான்ஸில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 39 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலைய பொலிஸாரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

நாட்டில் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவு….

இலங்கையில் நேற்றைய தினம் 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,477 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு மலையகம் 

பெருந்தோட்ட மக்களுக்கு ரூ.10,000 நிவாரண பொதி…

எதிர்வரும் 2 மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கும், தொழில் புரியாதவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இதனை தெரிவித்ததாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுப்படுத்தியுள்ள அவர், “ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிவாரண கொடுப்பனவு அதாவது தலா 5,000 ரூபா என்ற வகையில் இரண்டு மாதங்களுக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதனை பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கும், தொழில் புரியாதவர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். இந்த கொடுப்பனவு நிவாரண உணவு பொதியாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.” என்றார்.

Read More