Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது உள்நாடு 

யாழில்.கொடுத்த காசை வாங்க சென்ற பெண் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும் குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபாய் பணம் வாங்க சென்ற போதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.விசாரணைகளின் அடிப்படையில் பணம் வாங்கிய குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்து அவர்களது வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளதாகவும் அவரது மோட்டார் சைக்கிளையும் புதைத்துள்ளனர் எனும் சந்தேகந்தில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்அதேவேளை குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன் மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றத்தில் ஒருவருமாக மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரணவன் முன்னிலையில் அகழ்வு பணிகளை முன்னெடுத்த போது இ சுமார் 6 அடி ஆழமுள்ள கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலமும் மற்றுமொரு கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment