திருமணப் பரிசுமழையில் ரன்பீர்-ஆலியா பட் ஜோடி….
பாலிவுட் காதல் ஜோடிகளான ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மதிப்புள்ள பரிசுகளை வாரி வழங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல் இணையதளங்களில் கசிந்த நிலையில் ரசிகர்கள் இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்
ரன்பீர் மற்றும் ஆலியாபட் ஜோடிக்கு திருமண பரிசாக வந்த பொருட்களின் விபரங்கள் இதோ:
நடிகை கரீனா கபூர் – 3.1 லட்சம் மதிப்புள்ள வைர செட்
நடிகர் ரன்வீர் சிங் – கவாஸாகி நின்ஜா எச்2 ஆர் கார்
நடிகை தீபிகா படுகோன் – சோபார்ட் நிறுவனத்தின் ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஒரு ஜோடி கடிகாரம்
சித்தார்த் மல்ஹோத்ரா – வெர்சேஸ் நிறுவனத்தின் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட் பேக்
நடிகர் வருண் தவான் – ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஹை ஹீல்ஸ் குஸ்ஸி செருப்பு
நடிகை பிரியங்கா சோப்ரா – ரூ. 9 லட்சம் ரூபாய் மதிப்புள் நெக்லஸ்
ரன்பீர் கபூரின் தாய் நீது கபூர் – ரூ.26 கோடி மதிப்புள்ள 6 BHK பிளாட்
நடிகை கத்ரீனா கைஃப் – ரூ. 14.5 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் பிரேஸ்லெட்
பிரம்மாஸ்திரா இயக்குனர் அயன் முகர்ஜி – ரூ.1.3 கோடி மதிப்புள்ள ஆடி க்யூ8 கார்
நடிகர் அர்ஜூன் கபூர் – 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஸ்ஸியின் ஜிப்பர் ஜாக்கெட்
நடிகை அனுஷ்கா ஷர்மா – ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள ஆடை
இதுபோக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ரன்பீர்-ஆலியாபட் ஜோடிக்கு லட்சக்கணக்கில் பரிசுகள் குவிந்ததாக கூறப்படுகிறது.