Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

13 ஆவது நாளாகவும் தொடர்கிறது….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ‘கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப்பொருளிலான மக்கள் எழுச்சிப்போராட்டம் 13 ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த நபரை காலிமுகத்திடலில் கலந்துகொண்ட மக்கள் நினைவு கூர்ந்தனர்.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறு கோரி இலங்கை மத்திய வங்கி தொழிற்சங்க ஒன்றியமானது காலிமுகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

இதன்போது மத்தியவங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் அவர்கள் கோரியதுடன் அடக்குமுறையை நிறுத்துங்கள் வன்முறை ஒரு தீர்வல்ல எனும் பாதாகைகளை காட்சிப்படுத்தியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் மக்களின் எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பௌத்ததேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். திரிபேஹ சிறிதம்ம தேரர் எனும் பௌத்த தேரரொருவரே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment