மோட்டார் சைக்கிள்களை பரிசோதனை செய்யும் விசேட நடவடிக்கை இன்று ஆரம்பம்…
மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோர்களினால் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று தொடக்கம் 4 நாட்களுக்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டர் சைக்கிளாளேயே இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், நேற்றைய தினம் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கில் நடை பாதையில் சென்ற இருவரும், மோட்டர் வாகனங்களை செலுத்திய மூவரும், வாகனங்களில் சென்ற மூவரும் உயிரிழந்துள்ளனர்.
வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது இந்த மோட்டர் சைக்கிள் பரிசோதனையாகும். மோட்டார் சைக்கிள்களில் சொல்வோரை சிரமத்துக்குள்ளாக்குவது இதன் நோக்கமல்ல. வீதி பாதுகாப்பே முக்கியமாகும். நாளாந்தம் விபத்துக்களினால் 3 தொடக்கம் 5 பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புக்களை தடுப்பதே எமது நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.