Uncategorized 

மரக்கன்று நடும் சுபநேரத்தில் நடுவதற்காக கௌரவ பிரதமரினால் சுற்றாடல் அமைச்சருக்கு வெண்சந்தனக் கன்று வழங்கி வைப்பு!

மரக்கன்று நடும் சுபநேரமான நாளைய தினத்தில் (16) நடுவதற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால், சுற்றாடல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களுக்கு வெண்சந்தனக் கன்றொன்று வழங்கிவைக்கும் நிகழ்வு கால்டன் இல்லத்தில் இன்று (15) நடைபெற்றது.

தமிழ் சிங்கள புத்தாண்டு சடங்கின் மரக்கன்று நடும் புண்ணிய நிகழ்வு நாளை (16) காலை 6.40 மணிக்கு கிழக்கு நோக்கி இடம்பெறவுள்ளது.

இச்சடங்கின் பிரதான நிகழ்வு அகுணுகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள சுற்றாடல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைவாக மரக்கன்று நடும் சடங்கு நாடளாவிய ரீதியிலும் இடம்பெறவுள்ளது.

Related posts

Leave a Comment