Politics | அரசியல் 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் சந்தைப்படுத்த முடியாத நிலையில் 75 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட வட்டக்காய்கள் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமைகள் காரணமாக இவ்வாறு சந்தைப்படுத்த முடியாது இருப்பதாகவும் இதனால் தாம் பெரும் நட்டத்திற்கு முகம் கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கண்ணகிபுரம் கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயமாக காணப்படுகிறது. இந்தநிலையில் 75 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட வட்டக்காய்களை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை அவர்களை பெரிதும் பாதித்துள்ளது.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
www.kuruvi.lk

Related posts

Leave a Comment