Latest | சமீபத்தியது 

நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

நாட்டில் உடன் அமுலுக்கு வரும வகையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 7 கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பொலிஸ் பிரிவுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவும், திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் , அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்

.இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் – வலப்பன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment