Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அரசில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வை தனியாகவும், ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனிமாகவும் மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தயாராகிவருகின்றமை ஆளுந்தரப்புக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் ஆளுந்தரப்பால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைக்கு 11 பங்காளிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சி பங்காளிகளை பிரதமர் சந்திக்கின்றார்.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் World | உலகம் 

இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம்….

இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: ஊடக வெளியீடு இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தன இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் 2021 ஏப்ரல் 08ஆந் திகதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் ரோஹன அம்பகொல்ல மற்றும் நியூசிலாந்தின் வெளிநாட்டு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் பிரதேச முகாமையாளர் அண்ட்ரூ நீட்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். பரஸ்பரம் ஆர்வமுள்ள பரந்த அளவிலான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, மக்களுக்கிடையிலான பரிமாற்றம், கல்வி முதல் விளையாட்டு மற்றும் சுற்றுலா…

Read More
Politics | அரசியல் Uncategorized 

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு…

எதிர்வரும் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2019ம் ஆண்டுக்காக வழங்க வேண்டிய கணக்காய்வு அறிக்கைகளை இதுவரை வழங்காத 4 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்திருக்கிறது. எதிர்வரும் 22ம் திகதிக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் உரிய கட்சிகளின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்படும்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர் மத, இன அடிப்படையில் அமைந்துள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படவிருக்கிறது. இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை – முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

கிழக்கு முனைய விவகாரத்தில் ஏற்பட்ட சுமூகமற்ற நிலை காரணமாக இந்தியா வழங்கிய கடன் தொகையை உடனடியாக மீளச் செலுத்துமாறு அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நெருக்கடிகளும் ஆரம்பமாகியுள்ளன. சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்- “சுதந்திர தின உரை பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனத்தில் ஆற்றும் உரையாகவே காணப்பட்டது. நாடு தொடர்பில் பொதுவாக பேசாமல் வழமையைப் போன்று அரசியல் பேசுகின்றார் ஜனாதிபதி. அவரது உரையிலிருந்தே நாட்டின் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியும். தற்போது உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நாடுகளுடனான நெருக்கடிகளும் தோற்றம் பெற்றுள்ளன.…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

கோட்டாபய தலைமையில் இனவாத இராச்சியம் உதயம் – மன்னாரில் மனோ கணேசன் விசனம்

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராச்சியம் உருவாகியுள்ளது என மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று மன்னார் பஸ் நிலையத்துக்கு முன்னால் பேரணியில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “தமிழரும் முஸ்லிமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்து விட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. இது கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணி திரண்டு இருக்கின்றார்கள். துணையாக நான்களமிறங்குகிறேன்” என்றார்.

Read More