தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி நிதியம் (Ceylon Estate Workers’ Education Trust) கோரியுள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில்கல்வி, தொழில்நுட்ப கல்வி கற்கை நெறிகளை தொடர்வதற்காக இந்த புலமை பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (06 பாடங்களில் திறமை சித்தி) அல்லது உயர்தர பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன், 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இதற்காக இந்த புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன், பிறப்பு சான்றிதழ், சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப்பரீட்சை பெறுபேற்றின் சான்றிதழ், பெற்றோரின் தற்போதைய சம்பளப்பட்டியல் ஆகியவற்றின் பிரதிகள் தற்போது வதிவிட தோட்ட…
Read More