Uncategorized 

தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்…

தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி நிதியம் (Ceylon Estate Workers’ Education Trust) கோரியுள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில்கல்வி, தொழில்நுட்ப கல்வி கற்கை நெறிகளை தொடர்வதற்காக இந்த புலமை பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (06 பாடங்களில் திறமை சித்தி) அல்லது உயர்தர பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன், 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இதற்காக இந்த புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன், பிறப்பு சான்றிதழ், சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப்பரீட்சை பெறுபேற்றின் சான்றிதழ், பெற்றோரின் தற்போதைய சம்பளப்பட்டியல் ஆகியவற்றின் பிரதிகள் தற்போது வதிவிட தோட்ட…

Read More

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதை தடை செய்வதற்கு நடவடிக்கை…

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதை தடை செய்யும் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன நுகர்வோர் அதிகார சபையை வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இறக்குதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன் ஏனைய எண்ணெய் வகைகளை கலப்பதற்கு அனுமதி அளித்து 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் பிரச்சினைக்கு கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே காரணம் எனறும் தெரிவித்தார்.

Read More