Latest | சமீபத்தியது 

அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் கோரியிருந்த தடை உத்தரவை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. இதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் வரை தொழில் வழங்குணர்கள் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவது அவசியமாகும். இதற்கு மாறாக செயற்படுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது 

மரத்தூளைப் (Sawdust) பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்க திட்டம்

மரத்தூளைப் (Sawdust) பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்கும் முறை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை மரப்பலகை இறக்குமதி செய்வதற்காக ரூபா 41,576 மில்லியன் செலவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததார். மேலும் 59 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மரப் பலகைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More
jafna-யாழ்ப்பாணம் 

பண்டிகைக் காலத்தில் விசேட ரயில்கள் சேவையில்…

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணம், பதுளை, களுத்துறை தெற்கு, வெயாங்கொட, அனுராதபுரம், குருநாகல், பெலியத்த, மாத்தறை, மருதானை, காலி ஆகிய இடங்களுக்கான ரயில் சேவை இந்தக் காலப்பகுதியில் அமுலில் இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

இலங்கையர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்…

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு இன்று மீளாய்வு செய்துள்ளது. வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிக்கை பின்வருமாறு: இலங்கையர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு இன்று (2021, ஏப்ரல் 06) மீளாய்வு செய்தது. புதிய நடைமுறையின் கீழ், இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத பிள்ளைகள் மற்றும் விமானம் மூலம் வருகை தரும் இலங்கை மாலுமிகள் ஆகியோர் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றின் முன் அனுமதியின்றி…

Read More
Latest | சமீபத்தியது 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் :ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்படாத விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்படாத சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்; அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் எமது உபகுழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறான குறைபாடுகளை கண்டறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சிபாரிசுகள் அடங்கிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்தார்.கிழக்கில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்தமைக்கு எல்.ரீ.ரீ.ஈ டுவுவுநு காரணமென குற்றம் சாட்டப்பட்டது. உண்மையை மூடி…

Read More
Latest | சமீபத்தியது 

பஸ் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயம்.

இன்றைய தினம் தம்புள்ளாவின் கல்கிரியகாமாவில் உள்ள கால்வாயில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் 18 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் பஸ்ஸின் கட்டுப்பாட்டை இழந்ததாக பஸ்ஸின் சாரதி தெரிவித்துள்ளார். காயமடைந்த பிராயணிகளை கிராம மக்கள் மீட்டு தம்புள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Read More