Uncategorized 

அரச மற்றும் தனியார் வங்கிகள் நாளை (12) இயங்கும் என பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

12 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் வங்கிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பலருள் எழுந்தது. இந்நிலையிலேயே வங்கிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளன.

Read More
Latest | சமீபத்தியது 

கிருலப்பனை ஸ்ரீ எலன் மெத்தினியாராம அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.…

கிருலப்பனை ஸ்ரீ எலன் மெத்தினியாராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதானசாலை, ஆசிரமம் மற்றும் தியான பூங்கா திறப்புவிழாவை முன்னிட்டு இன்று (11) பிற்பகல் விகாரையில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்குபற்றினார் விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், சமயக் கிரியைகளில் கலந்துகொண்டதன் பின்னர் அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு மகாசங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கினார். இன்று இடம்பெறும் சங்கைக்குரிய உடுவே தம்மாலோக்க தேரரின் பிறந்த நாள் மற்றும் நாளைய தினம் இடம்பெறும் தேரரின் தாயாரின் பிறந்த நாளுக்கு ஆசிர்வாதம் அளிப்பதும் இந்த அன்னதான நிகழ்வின் மற்றுமொரு நோக்கமாகும். மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர்களான சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர், அமரபுர மகாநிக்காயவின் அனுநாயக்க தேரர், கிருலப்பனை எலன் மெத்தினியாராம…

Read More
Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நாடு திரும்பிய இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார்.

இச்சாதனையை புரிவதற்கு (59.3 கிலோ மீற்றர்) அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது. இதற்குமுன்னர் 1971 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அரசில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வை தனியாகவும், ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனிமாகவும் மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தயாராகிவருகின்றமை ஆளுந்தரப்புக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் ஆளுந்தரப்பால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைக்கு 11 பங்காளிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சி பங்காளிகளை பிரதமர் சந்திக்கின்றார்.

Read More