Latest | சமீபத்தியது 

நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

நாட்டில் உடன் அமுலுக்கு வரும வகையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 7 கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பொலிஸ் பிரிவுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவும், திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் , அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார் .இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் – வலப்பன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

கொட்டகலையில் விபத்து – தாய், தந்தை, மகன் படுகாயம்!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நேற்று இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். ஆட்டோவில் பயணித்த ஒரே தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read More
Politics | அரசியல் World | உலகம் 

சென்னையில் அனைத்து இடங்களிலும் திமுக முன்னணி

தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், சென்னையின் மற்ற 15 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் அக்கட்சியின் இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.

Read More