Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

படை வீரர்கள் மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..

படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவர் திருமதி சோனியா கோட்டேகொடவினால் படை வீரர்கள் கொடி ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. மூன்று தசாப்த காலமாக நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமானதொரு தேசத்திற்காக அர்ப்பணிப்புகளை செய்த படை வீரர்களை நினைவுகூரும் வகையில் படை வீரர்கள் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மே மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு தேசிய படை வீரர்கள் கொடி அணிவிக்கப்பட்ட நாள் முதல் படை வீரர்கள் நினைவு மாதம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

வாழ்த்து செய்தி – 2021 மே 03

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினத்தில் மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக இரவு பகலாக அயராது உழைக்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தகவல் தொடர்பு தற்போது உலகில் மிக வேகமாக முன்னேறிவரும் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் பல்வேறு ஊடகங்களின் ஊடாக தகவல்கள் பொதுமக்களை சென்றடையும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. எனினும், சுயாதீனமான மற்றும் பொறுப்பான ஊடக பாவனையே காலத்தின் தேவையாகும். முறையான ஊடக பயன்பாட்டின் மூலமே மக்களின் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்படுகிறது.அதற்காக பணியாற்றுவது அனைவரதும் பொறுப்பும், கடமையுமாகும் என நான் நம்புகின்றேன். இந்நாட்டின் ஊடக சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசித்திரமான காலங்களை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. நாம் அதிகாரத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும்…

Read More
Latest | சமீபத்தியது 

நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் கடற்றொழில் அமைச்சர்…

கொரோனா தொற்று இலங்கையில் மாத்திரமல்ல உலகக்கிலும் தற்போது பாரிய அச்சசுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன் சில நாடுகளில் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும் குறிப்பிடலாம் என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை குறித்த தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஆனாலும் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார். வவுனியாவிற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் வெளிநாடுகளில் இருந்து பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களை கட்டுப்படுத்தி இருப்பதால் அது குறைக்கப்பட்டுள்ளது. இத்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை…

Read More
Latest | சமீபத்தியது 

A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு

2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது. பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். 2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன. இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது 

ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசியின் முதல் தொகை இலங்கைக்கு..

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​நேற்று (03)இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகளை பொறுப்பேற்க இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், பொறுப்பேற்கப்பட்ட தடுப்பூசிகளை பின்னர் சுகாதார அமைச்சிடம் அவர் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியை இந்நாட்டு அவசர தேவைக்காக பயன்படுத்த கடந்த தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அதற்கமைவாக 7 மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More