Latest | சமீபத்தியது World | உலகம் 

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு அமைய இணங்காணப்பட்ட மனித உரிமை விவகாரங்களில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான இணைக்குழுவினால் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு குறிப்பாக சிறுபான்மை மதத்தவர்களின் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் உரிய முனைப்பு காண்பிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அண்மைய கால மனித உரிமை நிலைமைகள் குறித்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வரும் விதம் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஆசிரியர் அனாப் ஜாசீம் ஆகியோர் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை – முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

கிழக்கு முனைய விவகாரத்தில் ஏற்பட்ட சுமூகமற்ற நிலை காரணமாக இந்தியா வழங்கிய கடன் தொகையை உடனடியாக மீளச் செலுத்துமாறு அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நெருக்கடிகளும் ஆரம்பமாகியுள்ளன. சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்- “சுதந்திர தின உரை பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனத்தில் ஆற்றும் உரையாகவே காணப்பட்டது. நாடு தொடர்பில் பொதுவாக பேசாமல் வழமையைப் போன்று அரசியல் பேசுகின்றார் ஜனாதிபதி. அவரது உரையிலிருந்தே நாட்டின் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியும். தற்போது உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நாடுகளுடனான நெருக்கடிகளும் தோற்றம் பெற்றுள்ளன.…

Read More
Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இலங்கையிலும் ஆதரவாளர்கள் – ஐ.நா. அறிக்கையில் தகவல்

ஐ.எஸ். அமைப்பை பின்பற்றுபவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்று ஐ.நாவின் அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பொறுப்பான பயங்கரவாத குழு தெஹ்ரி – இல் தலிபான் பாகிஸ்தான் என்ற ஐ.நாவின் அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இணைவழி மூலமாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. இந்த அமைப்பை இலங்கை மற்றும் மாலைதீவில் பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று வொய்ஸ் ஒவ் ஹின்ட்ஸ் என்ற பிராந்திய ஆங்கில இதழிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மாலைதீவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எல். என்ற அமைப்பு ஐ.ஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வளர்க்க முயற்சிக்கிறது என்றும் ஐ.நாவின் அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அல் முஹாஜிர் என்ற ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.எஸ். அமைப்பின் தளபதியே, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்…

Read More
Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

உதைபந்தாட்ட நட்சத்திரம் மரடோனா திடீரென மரணம்

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரான டியாகோ மரடோனா தனது 60 வயதில் நேற்று காலமானார். ஆர்ஜென்டினா தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது. மரடோனாவுக்குக் கடந்த நவம்பர் மாதம் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அதிகளவுக்கு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்பட இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 1986-ஆம் ஆண்டு ஆர்ஜென்டினா உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டியை வென்றபோது மரடோனா அந்த அணியின் கப்டனாக இருந்தார். இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் நுழைவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் காரணமாக இருந்தது. புகழ்பெற்ற அந்தக் கோல் பலராலும் இன்றும் பேசப்படுகிறது. இதேவேளை, மரடோனாவின் மரணத்துக்கு…

Read More
Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது 

நினைவு தூபி கட்டும்வரை போராட்டம் தொடரும் – பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு

இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபியின் கட்டுமானப் பணி மீள ஆரம்பிக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும் என்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்றிரவு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குண ராஜாவை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போது, யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்காகக் கட்டமைக்கப்பட்ட நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே கட்டப்பட்டது. இருந்த போதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய தங்களால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தகர்க்கப்பட்டது. தங்களின் அதிகாரங்களை பயன்டுத்தி பயன்படுத்தி யுத்தத்தால் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும்நோக்குடன் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து கட்டுவதற்கான அனுமதியை தந்துதவ வேண்டும். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்து பொலிஸார், இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்று கடிதம் மூலமான கோரிக்கையை முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த துணைவேந்தர்,…

Read More
Entertainment | பொழுதுபோக்கு, Latest | சமீபத்தியது 

ஈஸ்வரன் டிரெய்லர் எப்போது ரிலீஸ்?

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படம் ஈஸ்வரன். இந்தப் படத்தின் டிரெய்லர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் முடிந்து, தளர்வுகள் தொடங்கியபோது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமானார். திண்டுக்கல் பகுதியில் 28 நாட்களுக்குள் ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடித்து சென்னைக்குத் திரும்பியது படக்குழு. உடனடியாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்கினார் சுசீந்திரன். பொங்கலுக்கு வெளியிட்டுவிட வேண்டும் என்று சிம்பு விரும்பியதைத் தொடர்ந்து, படமும் விரைவாக முடிந்து தயாரானது. இந்த நிலையில், வரும் பொங்கலுக்கு மாஸ்டருடன் மோதுகிறது ஈஸ்வரன். மாஸ்டர் படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாவதால், அடுத்த நாளான ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் வெளியாகிறது. திரைத்துறையினர் விரும்பியது போல 100 சதவிகிதம் திரையரங்க இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

கோட்டாபய தலைமையில் இனவாத இராச்சியம் உதயம் – மன்னாரில் மனோ கணேசன் விசனம்

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராச்சியம் உருவாகியுள்ளது என மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று மன்னார் பஸ் நிலையத்துக்கு முன்னால் பேரணியில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “தமிழரும் முஸ்லிமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்து விட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. இது கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணி திரண்டு இருக்கின்றார்கள். துணையாக நான்களமிறங்குகிறேன்” என்றார்.

Read More