Sport | விளையாட்டு 

ICC யின் 2021 ஆண்டின் டி20 அணி அறிவிப்பு…..

2021 ஆண்டின் சிறந்த டி20 அணியை தேர்ந்தெடுத்து ICC அறிவித்துள்ளது. ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணியில் மொத்தம் 11 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணிக்கு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாபர் அசாம் பாகிஸ்தான் டி20 அணியின் கேட்பன் என்பது குறிப்பிடத்தக்கது. ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணியில் 3 பாகிஸ்தான் வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்கா வீரர்கள், 2 அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இலங்கை, இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் இடம்பிடித்துள்ளனர். ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணி விபரம்: ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)பாபர் அசாம் (கேப்டன்) (பாகிஸ்தான்)மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா)மிட்செல் மார்ஷ் (அவுஸ்திரேலியா)டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா)வனிந்து ஹசரங்கா (இலங்கை)ஷம்சி (தென் ஆப்பிரிக்கா)ஜோஷ் ஹேசில்வுட்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

ஜே.வி.பி போராட்டத்தில் முட்டையால் தாக்குதல்…..

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் போராட்டம் நடத்திய போது முட்டையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு….

இலங்கையில் நேற்றைய தினம் 12 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,243 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

பொது மக்களின் குறைநிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும் – வடமாகாண ஆளுநர்

வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண ஆளுநராக நான் கடமைகளை பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. எனக்கு ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன. சிலர் நேரிலும் வந்து என்னை சந்திக்கின்றார்கள். என்னை சந்திக்க வருபவர்கள் சிறுசிறு பிரச்சினைகளோடு வருகின்றார்கள். அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சாதாரண மட்டப் பிரச்சினைகள் அதாவது கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் அவர்களால் தீர்க்கப்படாதவிடத்து என்னிடம் வருகின்றார்கள். நான் என்னிடம் வருபவர்களை திருப்பி அனுப்ப முடியாது. அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை…

Read More
Sport | விளையாட்டு 

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சானியா மிர்சா….

இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு அவரது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 35 வயதான சானியா மிர்சா 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டென்னிஸ் வீராங்கனையாகத் தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். இந்திய டென்னிஸ் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார். இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் மூன்று மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஒற்றையர் தரவரிசையில் 27 ஆவது…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் வீதம் அதிகரிப்பு…

கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் காணப்படுகிறதா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகள் அனைத்தும் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , மாணவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே மாணவர்கள் மத்தியிலும் , மாணவர்கள் ஊடாகவும் கொவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் கனிசமானளவு அதிகரிக்கக் கூடும். அதற்காக பாடசாலைகளை மீண்டும் மூட முடியாது. எனவே தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (19) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

Read More
Politics | அரசியல் உள்நாடு 

ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு…..

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையுடன் தற்போது காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மூன்று தினங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கவுள்ளார். உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு நல்குதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி துறையின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. குறித்த சந்திப்பின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தொடர்பாக இன்று(19.01.2022) நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் இந்த ஆண்டிற்கான ஆரம்ப உரை நாட்டு மக்களுக்கு ஒளி வீசும் நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத்தீவு கொவிட் 19 காரணமாக எதிர்கொள்ளும் சவால்களை யதார்த்தமாக தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.சக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயங்களை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டதும், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேவைகள்…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி 7 முதல் 10 வரை…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப் பட்டமளிப்பு விழா வருகிற பிப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் தேதி வரை ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கிறது. மொத்தமாக எட்டு பகுதிகளாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில் மொத்தமாக 2619 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற உள்ளனர். இதில் 2,307 பட்டதாரிகள் உள்வாரியான பட்டங்களை பூர்த்தி செய்வொரும், 312 பட்டதாரிகள் வெளி வாரியான பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More
உள்நாடு 

முல்லைத்தீவில் 100 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் காலணிகள் அன்பளிப்பு….

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகளை இராணுவம் அண்மையில் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பிராந்திய பாடசாலைகளின் மாணவர்களுக்கு முல்லைத்தீவில் உள்ள படையினரால் முல்லைத்தீவு வித்யானந்தா கல்லூரி வளாகத்தில் வைத்து இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 627முல்லைத்தீவில் உள்ள படையினரின் கோரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பிற்கு அமைய தனியார் நிறுவனம் ஒன்று இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கியது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் 59 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி 591 மற்றும் 592 ஆவது பிரிகேட்களது தளபதிகள் ஆகியோர் இந்த அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More