Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

நடுநிலைமை என்பது கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே -வேலுகுமார்

மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் என்றும் நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு முழுவதும் நாளுக்கு நாள் தன்னெழுச்சி போராட்டம் வீரியம் பெற்று வருகின்றது. மக்களின், ‘கோட்டா போ’ என்ற கோஷம் வலுப்பெறுகிறது. ‘ராஜபக்ஷக்களை விரட்டி அடிப்போம், கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெறுவோம்’ என்று பல மட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கிறது. ஆனால், அரசாங்கம் தனது வழமையான அசமந்த போக்கையும் இழுத்தடிப்பையும் செய்து வருகின்றது. வீதிகளிலே மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப போராடுகின்றபோது, அதற்கு மதிப்பளித்து, அரசியல் அமைப்பிற்கமைய நாடாளுமன்றத்தில் நாம் அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டி இருக்கின்றது. அதற்காக நம்பிக்கையில்லா…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்…

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று, (18) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். திரு. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி திரு. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு திரு. ரமேஷ் பத்திரன – கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில் திரு. பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா திரு.திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில் திரு கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் திரு.விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சு திரு.ஜானக வக்கும்புர – விவசாயம், நீர்ப்பாசனம் திரு.ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் திரு. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

இன்று இரவு ஜனாதிபதியின் விசேட உரை !

ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையே இவ்வாறு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும்…

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி ,அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர் அமைச்சர்கள் எவரும் மேலதிக வரப்பிரசாதங்களை பயன்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார். நேர்மையான, திறமையான, கறைபடியாத அரசாங்கத்தை இவர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி ,தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊழலில் இருந்து விடுவித்து, பொது மக்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டவர்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிதி நெருக்கடியில் உள்ள பெரும்பாலான பொது நிறுவனங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும் ,இந்த மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்கு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி 37,500 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 41,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் வந்துள்ள நிலையில் எரிபொருளை இறக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இந்த வாரம் தீர்மானம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

முழு அரசாங்கத்திற்கும் எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இந்த வாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் இந்த வாரம் கூட்டப்பட்டு அங்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

பதவி விலகும் மஹிந்த ராஜபக்ஷ ?

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பாராளுமன்றின் நிலையை கருத்திற்கொண்டும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரதமர் பதவிக்காக டலஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. ஏப்ரல் மாத முதல் வாரத்தில் பதவியிலிருந்து விலகுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருந்த போதும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ,எவ்வாறாயினும், பிரதமர் பதவி விலகுவாரானால் ஆளுங்கட்சியில் உள்ள பெரும்பான்மையான எம்.பிக்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம் மேற்கொள்வார்கள் எனவும், எனவே தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில்…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

தரம் 1 மாணவர் அனுமதி குறித்து வெளியான கல்வியமைச்சின் அறிவிப்பு –

2022ஆம் வருடம் அரச பாடசாலைகளுக்கான தரம் 1 மாணவர் அனுமதி குறித்து கல்வியமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி , ஏப்ரல் 19ஆம் திகதி தரம் ஒன்றுக்கான புதிய மாணவர் சேர்க்கை செயற்பாடுகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. இதன்படி பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் அதனை கையளிக்க நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேவேளை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரை நடை பயணப் போராட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 24ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் குறித்த நடை பயணப் போராட்டம் மே 1ஆம் திகதி கொழும்பை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலம் கொடுப்பதே நடை பயணப் போராட்டத்தின் நோக்கம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு!

இன்றைய தினமும் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி , இன்று முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Read More